‘இனி அந்தச் செயற்கைக்கோள்கள் பயன்படாது’ - இஸ்ரோ அறிவிப்பு

‘இனி அந்தச் செயற்கைக்கோள்கள் பயன்படாது’ - இஸ்ரோ அறிவிப்பு

இன்று காலை எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் செயலிழந்துவிட்டதால் இனி அவை பயன்படாது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள 750 அரசு பள்ளி மாணவிகள் இணைந்து ‘ஆசாதிசாட்’ என்ற பெயரில் ஒரு செயற்கைக்கோளைத் தயாரித்திருந்தனர். அந்தச் செயற்கைக்கோளையும் அதனுடன் ஐஓஎஸ் 2 என்ற மற்றொரு செயற்கைக்கோளையும் இன்று காலை எஸ்எஸ்எல்வி டி1 என்ற ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.18 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவியது.

வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டுவிட்டாலும் செயற்கைக்கோள்களில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. அவற்றிலிருந்து தகவல் தொடர்பைப் பெறும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி வரை அதிலிருந்து எந்தத் தகவல் தொடர்பும் கிடைக்காததால் அந்த இரண்டு செயற்கைக்கோள்களும் செயலிழந்துவிட்டதாகவும், அதனால் அவை பயன்படாது என்றும் இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வட்டப்பாதைக்கு பதில் நீள்வட்டப் பாதையில் அவை செலுத்தப்பட்டுவிட்டதால் அவை செயலிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in