மணிப்பூரின் தீவிரவாத அமைப்புகளை தடைசெய்து உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர்
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர்

மணிப்பூர் மாநிலத்தில் செயல்படும் மெய்தி ஆதரவு ஆயுதக் குழுக்களை ‘சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் 5 ஆண்டுகளுக்கு தடைசெய்வதாக உள்துறை அமைச்சகம் திங்களன்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம், புரட்சிகர மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மணிப்பூர் மக்கள் ராணுவம், காங்கிலிபாக் மக்கள் புரட்சிக் கட்சி, காங்கிலிபாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவ்வாறு தடைக்கு ஆளாகி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்

இந்த அமைப்புகள், ’ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து மணிப்பூரைப் பிரித்து ஒரு சுதந்திர தேசத்தை நிறுவுவதையும், மணிப்பூரின் பழங்குடியினரை அத்தகைய பிரிவினைக்கு தூண்டுவதையும்’ நோக்கமாக கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தடை அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் ஈடுபடுவதாக அரசாங்கம் கருதுவதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

சர்வதேச எல்லைக்கு அப்பால் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இந்த அமைப்புகள் பெறுவதாகவும், தங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து பெரும்நிதியை மிரட்டி வசூலிப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் தடை உத்தரவு விவரிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை மெய்தி மற்றும் சிறுபான்மை பழங்குடி குக்கி சமூகங்களுக்கு இடையே, கடந்த மே 3 முதல் வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. இதில் அந்த மாநிலத்தில் குறைந்தது 178 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in