எம்ஜிஎம் குழுமம் 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அதிர்ச்சி தகவல்

எம்ஜிஎம் குழுமம் 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு: வருமான வரித்துறை அதிர்ச்சி தகவல்

எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 3 கோடி பணம், 2.50 கோடி மதிப்புள்ள நகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கடந்த 15-ம் தேதி தமிழகம் மற்றும் பெங்களூருவில் எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், கோயம்புத்தூர், புதுச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. சென்னையில் உள்ள எம்ஜிஎம் பொழுதுபோக்கு பூங்கா, எம்ஜிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் நேசமணி மாறன் முத்து மற்றும் அவரது மகன்கள் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. நான்கு நாட்களாக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முறைகேடாக பல்வேறு விற்பனை ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வரி ஏய்ப்பு செய்ததும், இந்த குழுமத்திற்கு வணிக தொடர்பு இருக்கும் நிறுவனத்திலிருந்து போலி ஆவணம் பெறப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வணிக தொடர்புடைய நிறுவனங்களிடம் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளை கணக்கில் காட்டாமல் ரொக்கமாக பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலம் பெறப்பட்ட பணத்தை முறைகேடாக முதலீடு செய்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த குழுமத்தின் தொடர்புடைய வெளிநாட்டு ஹோட்டல்களில் செயல்பாடுகளை இந்தியாவில் இருந்துகொண்டு சட்டவிரோதமாக செயல்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 3 கோடி ரூபாய் ரொக்கம், 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைவராக இருந்தபோது எம்ஜிஎம் குழுமத்தின் நிர்வாகி நேசமணி மாறன் முத்து, சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஒதுக்கியது மற்றும் பல நிறுவனங்களின் முதலீடுகள் மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in