ஆற்றுப் பக்கம் போக வேண்டாம்: மேட்டூர் நீர்வரத்து குறைந்தாலும் வெள்ள அபாயம் நீடிப்பு

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

கடந்த மூன்று நாட்களாக இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் மேட்டூருக்கு நீர் வரத்து இருந்த நிலையில் இன்று 1.77 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியில் தொடரும் வெள்ளத்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீரைச் சுத்திகரிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிற நேரத்தில் அருவிகளின் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தமிழக எல்லையான பீலிகுண்டுவில் இன்று காலை வரை இரண்டு லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. இந்த நீர் அப்படியே மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் என்பதால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இதே அளவு நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்ளிடம் ஆறு முக்கொம்புவில் இருந்து கடலில் கலக்கும் இடமான பழையாறு வரையும் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் சீறிப் பாய்கிறது. இன்று காலை நிலவரப்படி இரண்டு லட்சத்து பத்தாயிரம் கன அடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் நீடிப்பதால் இந்த ஆறுகளின் கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in