கொள்ளை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதித்து மேட்டுப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு கொள்ளையடித்த வழக்கில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டோரி ஹக்கிம்(35) மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டோரிஹக்கிமுக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.