சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கலாம்

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்  எடுக்கலாம்

வாட்ஸ் அப்  மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மெட்ரோ ரயில் பயண டிக்கெட் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக டிக்கெட்டுகளைப் பெறும் வகையில் க்யூஆர் குறியீடு முறையில் டிக்கெட் பெறும் திட்டத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது.  மேலும் அதற்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடியும் மெட்ரோ நிறுவனம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மெட்ரோ ரயிலில் 61.56 லட்சம் பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் 1.15 லட்சம் பயணிகள் அதிகம் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளார்கள் என்றும்,  பயண அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.90 லட்சம்  அதிகரித்திருக்கிறது என்றும் சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அட்டை முறை, கியூ ஆர் கோடு என மூன்று முறைகள் ஏற்கெனவே உள்ளன.  இதன் தொடர்ச்சியாக  தற்போது   வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  பொதுவான கைபேசி எண் பயணிகளுக்கு வழங்க உள்ளது.  இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம்  ஹாய் என டைப் செய்து அனுப்பினால்,  சாட் போர்டு ஒன்று திறக்கும் எனவும், அதில் பயண விவரங்களைத் தெரிவித்து, பின்னர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் பிறகு பயணச்சீட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in