சேலம், திருச்சி, நெல்லைக்கு மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் சேவை

சேலம், திருச்சி மற்றும் நெல்லையில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயமுத்தூர், மதுரையைத் தொடர்ந்து சேலம், நெல்லை மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரலுக்குள் இது குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, அதற்கான அறிக்கை அரசிடம் ஒப்புதலுக்காக வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சேலம் மெட்ரோ ரயில் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மெட்ரோ நிர்வாகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

மேலும், சென்னை விம்கோ நகர் மெட்ரோ பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் பழுது ஏற்பட்டால் உடனே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இந்த பணிமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட விம்கோ நகர் பணிமனை தொழில்நுட்பக் கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in