சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 24 மணி நேரத்திற்கான அலர்ட் இதுதான்!

சென்னையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: அடுத்த 24 மணி நேரத்திற்கான அலர்ட் இதுதான்!

சென்னையை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில் கனமழை செய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்குத் தென்கிழக்கில் 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது படிப்படியாக நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நள்ளிரவு வரை காற்றழுத்த மண்டலம் தொடர்ந்து தீவிரமடையும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் 20 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குச் சென்னையில் மேகமூட்டம் நிலவும். மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைப் பொருத்தவரை அதிகபட்சமாக 30 செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in