'மேன்டூஸ்' புயல் ஏற்படுத்தும் பாதிப்பை பட்டியலிடும் வானிலை ஆய்வாளர்கள்

'மேன்டூஸ்' புயல் ஏற்படுத்தும் பாதிப்பை பட்டியலிடும் வானிலை ஆய்வாளர்கள்

'மேன்டூஸ்' புயலால் மக்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'மேன்டூஸ்' புயல் சின்னம் உருவாகியுள்ளது. காரைக்காலில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 320 கிலோமீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இந் புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது. அத்துடன் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கையினால் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் புயல் வீசும் என்பதால் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்று தமிழக தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

புயல் காரணமாக சென்னையில் விடிய, விடிய காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 'மேன்டூஸ்' புயல் நெருங்கி வருவதால் மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

'மேன்டூஸ்' புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ‘’இந்த புயலின் போது மரக்கிளைகள் முறிவு ஏற்படும். குடிசைப்பகுதிகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். சிறு மரங்கள் முறிந்து விழலாம்’’ என்று கூறியுள்ளார். வானிலை ஆய்வாளர் ரமணன் கூறுகையில், ’’வலு இழக்கும்போது கண்டிப்பாக கரையைக் கடக்கும். உராய்விசையின் காரணமாக வலு குறையும். இதனால் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். தற்போது கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. கரையைக் கடக்கும்போது புயல் உள்மாவட்டங்களில் மையம் கொண்டு விடும் என்பதால் உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்’’ என்று கூறியுள்ளார்.

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மாண்டஸ் கூறுகையில், 'மேன்டூஸ்' புயலின் காற்று அந்த அளவுக்கு வேகம் இருக்காது. நடுக்கடலில் மாண்டஸ் வலுவான புயலாக இருந்தாலும் வறண்ட காற்றினாலும் வலு இழக்கிறது. வலுவிழந்த நிலையில் இருப்பதால் 60 கிலோ மீட்டரில் இருந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் தான் காற்று வீசும். தானே, வர்தா புயல் மாதிரி இருக்குமா என மக்கள் அச்சப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த புயலின் வேகம் இருக்காது. அதுமாதிரி இல்லாவிட்டாலும் 60 கிலோ மீட்டரில் இருந்து 70 கிலோமீட்டர் வேகத்தில் புயலின் வேகம் இருக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in