இன்னும் ஒரு வாரத்திற்கு குளிர் வாட்டும்!

வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்னும் ஒரு வாரத்திற்கு குளிர் வாட்டும்!

சென்னையில் இன்னும் 8 நாட்களுக்கு இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது. அங்கு  குளிரினால் மாரடைப்பு , ரத்த அழுத்தம் அதிகரிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த  2 தினங்களாக லேசான மழையும் பெய்தது. இந்த நிலையில் சென்னையில் ஜனவரி 15-ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதே நேரத்தில் மழை முடிவுக்கு வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 30 டிகிரி செல்சியஸ் இடையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தின் மத்தியில்  இமயமலையில் இருந்து குளிர்ந்த காற்று தமிழகம் வரை வீசத் தொடங்கும் என்றும், இது இரவு வெப்பநிலையை குறைக்க வாய்ப்பாகும். அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழையை எதிர் பார்க்கலாம் என்றும், அதன் பிறகு வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் இனி  இரவில் கட்டாயம்  போர்வைகளுக்கு  வேலை இருக்கிறது. காலை நேரங்களில் வேலைக்கு கிளம்புபவர்கள் தலைக்கு குளிர் குல்லா, உடலுக்கு ஸ்வெட்டர் அணிந்து பாதுகாக்க செல்வதன் மூலம் முகவாதம் உள்ளிட்ட குளிர்கால பாதிப்புகளை தடுக்கலாம்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in