தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில்  17 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

இன்று தமிழகத்தில்  17 மாவட்டங்களில் கனமழை செய்யலாம் பெய்யலாம் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் அளவிற்கும்,  குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து  இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படும் நிலையிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  இன்றும் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'குமரிக்கடல் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.14)முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (15-ம் தேதி) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 16, 17-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்' என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in