தங்கத்தில் இழைத்த 35 ஐபோன்: அணியினருக்கு பரிசளித்து மகிழ்ந்த மெஸ்ஸி!

மெஸ்ஸி - தங்க ஐபோன்
மெஸ்ஸி - தங்க ஐபோன்

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணியினருக்கு அதன் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, தங்கத்தில் இழைத்த ஐபோன்களை பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார்.

1986ல் மரடோனா தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு 36 ஆண்டுகள் கழித்து மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்தாண்டு டிசம்பரில், கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பை வென்றது. அது முதல் வெற்றியைக் கொண்டாடி வரும் மெஸ்ஸி, தற்போது அணியினருக்கு தங்க ஐபோன் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார்.

24 காரட் தங்கத்தில் இழைத்த ’ஐபோன் 14எஸ்’ மாடலில் அணியைச் சேர்ந்த 35 பேர்களுக்கு பரிசளித்திருக்கிறார். மைதானத்தின் உள்ளே விளையாடிய வீரர்கள் மட்டுமன்றி, மைதானத்துக்கு வெளியிலிருந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்குமாக இந்த பரிசுகளை வழங்கி மரியாதை செய்திருக்கிறார்.

அணியினருக்கான ஐபோன்களில், அவர்களது பெயர், ஜெர்சி எண் ஆகியவற்றுடன் அர்ஜெண்டினா அணியின் லோகோ ஆகியவற்றையும் பொறிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் மெஸ்ஸி. இதற்காக மெஸ்ஸி செலவிட்ட தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.73 கோடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in