மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை: விளையாடிக்கொண்டிருந்தபோது தூக்கிச்சென்று நடந்த கொடூரம்

மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை: விளையாடிக்கொண்டிருந்தபோது தூக்கிச்சென்று நடந்த கொடூரம்

விளையாடிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூர், உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் ராஜா. விளையாடி கொண்டிருந்த சிறுமி வீட்டுக்கு அழுது கொண்டே வந்துள்ளார். அப்போது பெற்றோர், சிறுமியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிறுமிக்கு நடந்த கொடுமையை பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொந்தளித்தனர். இதையடுத்து ராஜாவின் வீட்டிற்கு சென்ற பொது மக்கள், அவரது மனைவியை வெளியேற்றிவிட்டு வீட்டிற்கு பூட்டு போட்டுவிட்டனர். தலைமறைவாக இருக்கும் ராஜா கடந்த 2021-ம் ஆண்டு தனது மகளையே பாலியல் வன்கொடுமை செய்து சிறைக்கு சென்றவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in