5 லட்சம் கடனுக்காக 98 ஆயிரத்தை இழந்தார்: மகனுக்கு மருத்துவ உதவி கோரிய தந்தையிடம் ஆன்லைனில் மோசடி

5 லட்சம் கடனுக்காக 98 ஆயிரத்தை இழந்தார்: மகனுக்கு மருத்துவ உதவி கோரிய தந்தையிடம் ஆன்லைனில் மோசடி

பரமக்குடியில் உடல் நலம் பாதித்த தனது மகனுக்கு இணையதள செயலில் உதவி கோரிய அரசு பஸ் கண்டக்டர் பணத்தை இழந்து கவலையடைந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், (35). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பரமக்குடி கிளையில் கண்டக்டராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் பயன்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் உடல் நலம் பாதித்த தனது மகனின் மருத்துவ செலவிற்கு உதவிடக்கோரி, முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதன்படி, முகநூலில் வந்த கடன் உதவி செயலியில் ரூ.5 லட்சம் கடன் கோரி தனது மொபைல் எண்ணை பதிவு செய்தார். இதைதொடர்ந்து 2022 டிச.30-ம் தேதி ராஜ்மோகன் மொபைல் போனில் தமிழில் பேசிய நபர் ஒருவர், கடன் தொகை அனுமதிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.

இதற்கு கடன் தொகை வழங்கும் நிறுவனம் கோரும் ஆவணங்கள், செயல்பாட்டு கட்டணம் அனுப்புமாறு அறிவுறுத்தினார். இதை முழுமையாக நம்பிய ராஜ்மோகன் ஆவணங்களின் நகல்கள், ஸ்டேட் வங்கி கூகுள் பே கணக்கு மூலம் அந்நிறுவனம் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு 9 தவணைகளாக ரூ.98 ஆயிரத்தை அனுப்பினார்.

இதன்பின்னர் கடன் தொகை வழங்காமல் மேலும் பணம் கேட்டு நச்சரித்தனர். நண்பர்களிடம் விசாரித்த பின்னர், தான் ஏமாற்றம் அடைந்தது தெரிந்தது. இது குறித்து காவல்துறையினரின் இணைய தளத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in