‘மருத்துவம் படிப்பது கடினமாக உள்ளது’ - தற்கொலைக் கடிதத்தில் மாணவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

‘மருத்துவம் படிப்பது கடினமாக உள்ளது’ - தற்கொலைக் கடிதத்தில் மாணவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

மருத்துவம் படிப்பது கடினமாக இருப்பதாகக் காரணம் சொல்லி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீட் தோல்வியால் காரணமாக மருத்துவம் படிக்க முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கிறது. அதே வேளையில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கின்றன. அந்த வரிசையில் மருத்துவம் படிப்பது கடினமாக உள்ளது எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் இளம்பரிதி(21) என்பவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். சரியாகப் படிக்காத காரணத்தால் இவர் முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த தருமபுரி நகர போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மாணவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், அதில், மருத்துவப் படிப்பது கடினமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in