வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பு: இந்தியாவில் தேர்வு எழுத தயாரான இளம் மருத்துவர் திடீர் தற்கொலை

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பு: இந்தியாவில் தேர்வு எழுத தயாரான இளம் மருத்துவர் திடீர் தற்கொலை

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் பணிபுரிய FMG தேர்வுக்கு படித்து வந்த இளம் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி ரயில்வே மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களது இளைய மகன் நவீன் குமார்(25) கடந்த ஆண்டு ஜார்ஜியா நாட்டில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு தற்போது இந்தியாவில் பணிபுரிவதற்காக ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் (FMG) என்ற தேர்வுக்காக வீட்டில் இருந்தபடி படித்து வந்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த எஃப்எம்ஜி (FMG) தேர்வில் தோல்வியடைந்ததால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ள எஃப்எம்ஜி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில் பெற்றோர் நேற்று வீட்டில் இல்லாத நேரத்தில் நவீன் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீட்டிற்கு வந்த பெற்றோர், மகன் நவீன் குமார் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்திற்கு வந்த போலீஸார், நவீன் உடலை மீட்ட உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in