நீட் தேர்வில் 94 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்: கொந்தளிக்கும் கல்வியாளர்

நீட் தேர்வில் 94 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்: கொந்தளிக்கும் கல்வியாளர்

"நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 94 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கிறது. நீட் கொண்டு வந்ததன் நோக்கம் மீண்டும் மீண்டும் தோல்வி அடைகிறது" என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் இது குறித்து மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. மாறாக நீட் தேர்வை ஆண்டுதோறும் நடத்திக் கொண்டுதான் வருகிறது. நீட் தேர்வு முடிவு வரும்போதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நிலை ஏற்படுமோ என்ற கவலையில் அவர்கள் இருந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வால் இதுவரைக்கும் 18க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். 12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நீட் என்னும் ஒற்றை நுழைவு தேர்வு அந்த மாணவரின் எம்பிபிஎஸ் கனவை தகர்த்துவிடுகிறது. பல மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைவதால் தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் வேதனையில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 94 மதிப்பெண்கள், அதாவது 13 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஒருவருக்கு மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சித் தகவலை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில், நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 94 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு மேனேஜ்மென்ட் கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கிறது. நீட் தரமான உள்ளீடுகளை கொண்டு வருகிறதுபோல் தெரிகிறதா? நீட் கொண்டு வந்ததன் நோக்கம் மீண்டும் மீண்டும் தோல்வி அடைகிறது. நீட் தேர்வு பயிற்சி பள்ளிகளுக்கு மட்டுமே பலன்களை தரும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in