அசத்தும் மயிலாடுதுறை மாவட்டம்: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் இந்தியாவில் மூன்றாவது இடம்

அசத்தும் மயிலாடுதுறை மாவட்டம்: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில்  இந்தியாவில் மூன்றாவது இடம்

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு  வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜல் ஜீவன் கணக்கெடுப்பு அறிக்கை - 2023-ன் படி  50 முதல் 75 சதவீதம் வரையிலான வீட்டுத் தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கியதற்கான  சாதனையை மயிலாடுதுறை மாவட்டம் எட்டியுள்ளது. அதன்மூலம்   நாட்டிலேயே மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் நவம்பர் 21 அன்று அறிவித்துள்ள  ஜல் ஜீவன்  கணக்கெடுப்பு மறு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குநர்கள்  ஆர்வலர்கள் (0 25 %), கலைஞர்கள் (25-30) சாதனையாளர்கள் (50-75 %), உயர் சாதனையாளர்கள் (75-100%) மற்றும் ஃபிராண்ட் ரன்னர்கள் (100%) எனப் பராமரிக்கப்படுகிறார்கள். இதில் மயிலாடுதுறை மாவட்டம் சாதனையாளர்கள் என்ற பட்டியலில்  இடம் பெற்றுள்ளது.

மிஜோராம் மாநிலத்தில்  உள்ள சம்பாய் மாவட்டம் 7.92.410 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மிஜோராம் மாநிலத்தில் உள்ள மாமீ மாவட்டம்  7,41,400 மதிப்பெண்களையும், தமிழ்நாட்டில்  மயிலாடுதுறை மாவட்டம்  7,15,350 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in