40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

நவ.21-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக் கடலில்   குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை  உருவாகியுள்ளது. அது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுதினம் தமிழக கரையை  நெருங்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கடலில் 40 முதல் 65 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் நவ. 21-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு அனைத்து மீனவ கிராமங்களுக்கு  இன்று மாலை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in