பொறியியல் படிக்க கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: ஏஐசிடிஇ

பொறியியல் படிக்க கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: ஏஐசிடிஇ

கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என்றும் வேளாண் பொறியியல் உள்பட 4 படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

2022-23 கல்வியாண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள 3-ல் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு முதல் 2 செமஸ்டர்களில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் அடிப்படை கல்வி bridge course முறையில் கற்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது.

வேளாண்மை, கட்டிடக்கலை உயிர் தொழில்நுட்பவியல், உணவு, தோல் பதனிடுதல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை என்றும் கடந்த கல்வி ஆண்டில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை விருப்ப பாடமாக படித்திருந்தால் மட்டுமே அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 12-ம் வகுப்பில் தொழில்கல்வி பயின்ற மாணவர்களும் பொறியியல் படிப்புகளில் சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in