
அருணாச்சலப் பிரதேசம் - அசாம் எல்லையோரத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பிரம்மாண்டமான அணையின் பக்கவாட்டு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், அணைக்கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபான்சிரி ஆற்றின் குறுக்கே 2000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநில எல்லையில் இந்த அணை கட்டப்பட்டு வரும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இந்த அணையில் தயாரிக்கப்படும் மின்சாரம் பயன்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அணையின் பக்கவாட்டில் இருந்த சுமார் 300 அடி உயர மலையில் இருந்து, கற்கள், பாறைகள் மற்றும் மரங்கள் அடியோடு சரிந்து அணை கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் விழுந்தது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த நிலச்சரிவு காரணமாக பல ஆயிரக்கணக்கான டன் மண் மற்றும் பாறைகள் அணையில் விழுந்து உள்ளதால் அசாம் மாநிலத்திற்கு செல்லும் சுபான்சிரி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இந்த இடிபாடுகளை அகற்றும்போது நீர் பாதை சரியாகும் என்பதால், அசாம் மாநிலத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவு காரணமாக அணை கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அணையின் கட்டுமானங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!