சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் பலி

வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை.
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை.சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் பலி

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் பிரவீன் ராஜ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் 120 பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தரை சக்கர பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருட்களை செலுத்தி கொண்டிருந்த இடத்தில் ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், இடையங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல் (55), கருப்பசாமி (32), ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மாரித்தாய், கருப்பம்மாள் ஆகிய இரு பெண்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in