`அந்த அர்த்தத்தில் நான் பேசவில்லை'- ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் பெண் மேயர் விளக்கம்!

பீனா பிலிப்
பீனா பிலிப்

கேரளத்தின் கோழிக்கோடு மேயர் பீனா பிலிப் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வட இந்தியாவை புகழ்ந்து பேசியதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் கோழிக்கோடு மாநகராட்சி மேயராக இருப்பவர் பீனா பிலிப். இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்த பாலகோகிலம் என்னும் மகளிர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு சென்றவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு மாலை சூட்டி, கலாச்சார நிகழ்வில் பங்கேற்றுவிட்டுப் பேசினார். அப்போது மேயர் பீனா பிலிப், “கேரளத்தை விட வட இந்தியாவில் குழந்தைகளின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது” எனப் பேசியதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில் தான் அந்த அர்த்தத்தில் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மேயர் பீனா பிலிப், “தான் பாலகோகிலம் என்னும் தாய்மார்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்குத்தான் சென்றேன். அந்த நிகழ்ச்சி எங்குமே ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியாக உணர்வைத் தரவில்லை. சாமியை வழிபட்டு நிகழ்வைத் தொடங்கும் மரபு இல்லங்களில் இருப்பதுதான். அதுமட்டும் இல்லாமல் நான் அந்தக் கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி பேசவில்லை. நான் பேசிய தொணி வேறு. புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் அர்த்தம் வேறு!

நான், கேரளத்தை விட வட மாநிலங்களில் பேரண்டிங் கேர் அதாவது பெற்றோர் குழந்தைகளை அணுகும்விதம், அவர்களிடம் உரையாடும் தன்மை நன்றாக இருக்கும் என்றுதான் பேசினேன். நான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து மார்க்சிஸ்ட் தரப்பில் இருந்து கேள்வி கேட்கவில்லை” என்றார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிழலாக இருக்கும் பாலகோகிலம் அமைப்பின் கூட்டத்திற்கு பீனா பிலிப் சென்றது மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in