6 குழந்தைகள் முன்னிலையில் 3 காதலிகளுக்கு தாலிகட்டிய கணவன்: ம.பியில் நடந்த ருசிகரம்!

6 குழந்தைகள் முன்னிலையில் 3 காதலிகளுக்கு தாலிகட்டிய கணவன்:  ம.பியில் நடந்த ருசிகரம்!

மத்தியப் பிரதேசத்தில் தனது 6 குழந்தைகளுக்கு முன்னிலையில் 3 காதலிகளை ஒருவர் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமர்த் மௌரியா(42). பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் மூன்று பெண்களை காதலித்து அவர்களுடன் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மூன்று காதலிகளையும் திருமணம் செய்ய சமர்த் மௌரியா முடிவு செய்தார். இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு மணமகன் பெயருடன், மூன்று காதலிகளின் பெயர்களையும் அச்சடித்து ஊரைக் கூட்டி தடபுடலாக திருமணம் நடத்தியுள்ளார் மெளரியா.

இதுகுறித்து அவர் கூறுகையில்," 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏழையாக இருந்தேன். அதனால் அவர்களை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. தற்போது வசதி வந்ததால் திருமணம் செய்துள்ளேன்" என்று கூறினார். சட்டப்படி திருமணம் செய்யாதவர்களை சமுதாயத்தின் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கட்டுப்பாடு காரணமாகவே மௌரியா இந்த திருமணங்களைச் செய்துள்ளார் என்று ஊர் மக்கள் கூறினர். இந்த திருமணத்தில் 6 குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர். திருமண விழாவில் மணமகன் சமர்த் மௌரியா நடனமாடி ஊர் மக்களை அசத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in