திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆத்திரத்தில் பிளேடால் கணவர் செய்த கொடூர செயல்

திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆத்திரத்தில் பிளேடால் கணவர் செய்த கொடூர செயல்

திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லையென்ற ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிச் சேதப்படுத்திய அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு ரவீந்திரனின் மனைவி சென்று விடுவது வழக்கம்.

இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குழந்தை தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரவீந்திரன் தனது மனைவியை அடித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். கடந்த 8 மாதங்களாக அவரது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு ரவீந்திரன் அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று ரவீந்திரன் தனது மனைவியை இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள முயன்றுள்ளார். இதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், பிளேடால் மனைவியின் அந்தரங்க உறுப்பை வெட்டி சேதப்படுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அவரது மனைவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ரவீந்திரன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in