என்னைக் காதலித்து கர்ப்பமாக்கி விட்டார்: நிறைமாத கர்ப்பிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட பொறியாளர் திருமணம்

என்னைக் காதலித்து கர்ப்பமாக்கி விட்டார்: நிறைமாத கர்ப்பிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட பொறியாளர் திருமணம்

தன்னைக் காதலித்து கர்ப்பமாக்கிய மென்பொருள் பொறியாளரின் திருமணத்தை நிறைமாத கர்ப்பிணி தடுத்து நிறுத்திய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகன் இவரது மூத்த மகள் நாகப்ரியா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகப்ரியாவும், சின்னச்சாமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நெருங்கிப் பழகியதில் நாகப்ரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், விருதுநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை சின்னசாமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இன்று அவர்களது திருமணம் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த நாகப்ரியா, தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் சின்னச்சாமிக்கு திருமணம் நடக்க இருந்த திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு அனைவரின் முன்பும் தன்னைச் சின்னச்சாமி காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கண்ணீருடன் கூறினார்.

இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மணமக்கள் குடும்பத்தினருடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் நாகப்ரியா மற்றும் சின்னசாமி குடும்பத்தினரிடம் பேசி திருமணத்தை நிறுத்தினர். இதன் பின் இரு குடும்பத்தினரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in