நாராயணன் கோயிலில் முஸ்லிம் ஜோடிக்கு நடந்த திருமணம்: நெகிழ வைத்த சம்பவம்

இந்து கோயிலில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஜோடி.
இந்து கோயிலில் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஜோடி.நாராயணன் கோயிலில் முஸ்லிம் ஜோடிக்கு நடந்த திருமணம்: நெகிழ வைத்த சம்பவம்

சிம்லாவில் உள்ள சத்தியநாரயணன் கோயிலில் இன்ஜினியர் முஸ்லிம் ஜோடிக்கு வெகுவிமர்சையாக திருமணம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம், சிம்லா மாவட்டம், ராம்பூரில் சத்திய நாராயணன் கோயில் உள்ளது. இக்கோயிலை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மார்ச் 3-ம் தேதி கோயிலில் ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் ஜோடிக்கு முஸ்லிம் முறைப்படி திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த திருமணம் குறித்து கோயிலின் செயலாளர் வினய் சர்மா கூறுகையில், "சத்தியநாராயணன் கோயில் நிர்வாகத்தை விஎச்பி அமைப்பு கவனித்து வருகிறது. கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. அதை பொய்யாக்கும் வகையில் இந்து கோயில் வளாகத்தில் முஸ்லிம் ஜோடிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்துக்களும் கலந்து கொண்டனர். திருமண விருந்து, விழா ஏற்பாடுகள் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றன. திருமணம் மட்டும் முஸ்லிம் பாரம்பரியத்தின்படி நடைபெற்றது" என்றார்.

திருமணம் குறித்து மணப்பெண்ணின் தந்தை மகேந்திர மாலிக் கூறுகையில், “கோயில் நிர்வாகிகள், ராம்பூர் நகர மக்கள் எனது மகளின் திரும ணத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனது மகள் எம்.டெக். சிவில் இன்ஜினீயர். மருமகன் ராகுல் ஷேக்கும் சிவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இருவரின் விருப்பத்தின்படி சத்தியநாராயணன் கோயிலில் இந்த திருமணம் வெகுசிறப்பான நடைபெற்றது" என்றார். முஸ்லிம் ஜோடிக்கு இந்து கோயிலில் நடைபெற்ற திருமணம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in