காலையில் தடபுடல் திருமணம்; மாலையில் உயிரிழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்: சோகத்தில் முடிந்த காதல் கல்யாணம்

காலையில் தடபுடல் திருமணம்; மாலையில் உயிரிழந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்: சோகத்தில் முடிந்த காதல் கல்யாணம்

திருமணம் நடந்த அன்று மாலையே சாஃப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் திண்டிவனத்தில் நடந்துள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் திருமணம் புதுச்சேரியில் நேற்று தடபுடலாக நடந்தது. இதன் பின்னர் கோட்டக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அருகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். அப்போது, புதுமாப்பிள்ளை சுரேஷ்குமார் உடை மாற்ற அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மயங்கிய நிலையில் சுரேஷ்குமார் கிடந்துள்ளார். உடனடியாக அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே சுரேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமணம் நடைபெற்ற அன்றே புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in