தேர்வு இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் தேர்வு இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய  மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு,  9 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது.

மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பப் பெற்று,   9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது  மனுவில்,  சிபிஎஸ்இ மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டங்களில் பயின்றவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வேயில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 769  குரூப் டி பணியிடங்களுக்கும், 40,889 தபால் துறை பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் வீல் தொழிற்சாலையில் 4,103 அப்பரன்டிஸ் பணிக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே இதே விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வுகள் நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in