பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மதிப்பெண் பட்டியல் இன்று விநியோகம்!

மதிப்பெண் பட்டியல்
மதிப்பெண் பட்டியல்பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மதிப்பெண் பட்டியல் இன்று விநியோகம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவு மே 8-ம் தேதி வெளியானது. இத்தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in