மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறது மெரினா காந்தி சிலை: மரியாதை செலுத்த அனுமதி இல்லை

மெட்ரோ பணிகளுக்காக இடம் மாறுகிறது மெரினா காந்தி சிலை: மரியாதை செலுத்த அனுமதி இல்லை

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அதற்கு அனுமதி கோரியிருந்தது. இதனால் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 90 சதவீதப் பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும். அதுவரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in