சட்டவிரோதமாக ஃபேன்சி ரக வெடி தயாரிப்பு: கருந்திரி, வெடிமருந்து பறிமுதல்

பட்டாசு (பைல் படம்)
பட்டாசு (பைல் படம்)சட்டவிரோதமாக பேன்சி ரக வெடி தயாரிப்பு: கருந்திரி, வெடிமருந்து பறிமுதல்

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண், மத்தியபிரதேச வாலிபர் இருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 20 பேர் மதுரை, சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகள் குறித்து வருவாய், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்க கருந்திரி மருந்து பதுக்கிய 9 பேர் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாராயணபுரம் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு கடையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், வி.சொக்கலிங்கபுரம் விஏஓ சகாயராஜ் ஜீவகன் அங்கு சென்று சோதனை செய்தார்.

அப்போது அக்கடையில் அனுமதியின்றி தயாராகிக் கொண்டிருந்த ஃபேன்ஸி ரக வெடிகள், சாட்டை வெடி, பவுண்டன் வெடி, சி்ட்புட் வெடிகள் மற்றும் கருந்திரி, வெடிமருந்து தூள் ஆகியவற்றைக் கைப்பற்றினார். விஏஓ புகாரின் பேரில் சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த ஆறுமுகசாமி (47) , வடக்கு தெரு ராஜதுரை (39), ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு, திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in