மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேதி - குக்கி சமூக மக்கள் அங்கு நீண்டகாலம் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். திடீரென அங்கு எப்படி கலவரம் மூண்டது. இதை திட்டமிட்ட சதியாகவே கருதமுடிகிறது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதன் ஆண்டு விழா நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், பாடகருமான சங்கர் மகாதேவன் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேதி - குக்கி சமூக மக்கள் அங்கு நீண்டகாலம் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். திடீரென அங்கு எப்படி கலவரம் மூண்டது. இதை திட்டமிட்ட சதியாகவே கருதமுடிகிறது. இந்த மோதல்களால் வெளிநாட்டு சக்திகளுக்கு நன்மை உண்டாகும். இதில் ஏதாவது வெளிநாட்டு சதிகள் இருக்கின்றனவா?. தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவினைவாதத்தினாலும் உள் முரண்பாடுகளினாலும் யாருக்கு நன்மை. இந்த முரண்பாடுகள் அனைத்தும் வெளி சக்திகளுக்குத்தான் பலன் தரும். அங்கு நடந்த சம்பவத்தில் வெளியிலிருந்து வந்தவர்கள் ஈடுபட்டார்களா. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் மூன்று நாள்கள் இருந்தார். உண்மையில் மோதலை தூண்டியது யார். வன்முறை அங்கு நடக்கவில்லை, நடத்தி வைக்கப்படுகிறது.
மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா என பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன. இது போன்ற செயல்களைச் செய்தவர்களின் பின்னணியில் இருப்பது யார்?. வன்முறையைத் தூண்டுவது யார்?. ஒற்றுமையை விரும்புபவர்கள் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளால் மனம் தளராமல் அமைதியாகவும், நிதானத்துடனும் பணியாற்ற வேண்டும்.
தாய்நாட்டின்மீதான பக்தி, முன்னோர்கள்மீதான பெருமை, பொது கலாசாரம் ஆகிய மூன்று கூறுகளும் மொழி, வாழும் பகுதி, மதம், பிரிவு, சாதி, கிளை சாதி ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் ஒன்றிணைத்து நம்மை ஒரே தேசமாக்குகின்றன. இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த நம்பிக்கைகளும் இந்தக் கூறுகளை நிலைநிறுத்த வேண்டும். கலாசார மார்க்சிஸ்டுகள் அராஜகம், குழப்பம் மற்றும் ஊழலை ஊக்குவித்து அதிகப்படுத்துகின்றன. ஊடகங்கள், கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் அவர்களின் செல்வாக்கு மூலம், அவர்கள் சமூக ஒழுங்கு, ஒழுக்கம், கலாசாரம், கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைக்க முற்படுகின்றனர்.
இந்தியாவில் ஜனவரி 22-ம் தேதி அயோத்தி கோயிலில் ராமர் சிலை நிறுவப்படும். நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இந்த விழாவைக் கொண்டாட மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். 2024 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளைச் சேகரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகக் களமாட வேண்டும்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு