மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம்!

தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன்
தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன்

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை அடுத்து மணிப்பூர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் மேதி சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில், இவர் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 27ம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருந்தார். மேதி சமுதாய மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்கின்ற அந்த தீர்ப்பு காரணமாக குக்கி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தன. அது தொடர்ந்து படிப்படியாக வன்முறையாக மாறி, தற்போது அந்த மாநிலத்திலே இப்போது வரை சகஜ நிலை திரும்பவில்லை. அத்தகைய சூழ்நிலை நிரப்புகிறது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கிய காரணமாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டே, இந்த தீர்ப்பு தவறானது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த தீர்ப்பை மாற்றிக்கொள்ள நீதிபதி முரளிதரனுக்கு வாய்ப்பு இருந்தும் கூட அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக கண்டனம் செய்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையைத்தான் சர்ச்சைக்குரிய மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி முரளிதரன் தற்போது கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். அவரை பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலுஜியம் பரிந்துரை அளித்திருக்கிறது. விரைவிலேயே மத்திய அரசு இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in