பெண்களைக் குறிவைத்து ஏடிஎம் மையங்களில் கைவரிசை: சிசிடிவியால் சிக்கிய அரசு ஊழியர்

பெண்களைக் குறிவைத்து ஏடிஎம் மையங்களில் கைவரிசை: சிசிடிவியால் சிக்கிய அரசு ஊழியர்

ஏடிஎம் மையங்களுக்கு வரும் பெண்களிடம் உதவி செய்வது போல பணமோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 6-ம் தேதி சென்னை பெரம்பூர் அருகே எம்கேபி நகரைச் சேர்ந்தவர் ஜாக்லின். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்து தருவதாக ஒரு நபர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில், ஏடிஎம் மையங்களுக்கு வரும் பல பெண்களிடம் உதவி செய்வது போல ஒருவர் அவர்களது கார்டுகளைப் பெற்றுப் பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பின்பு அதே கார்டை மாற்றி கொடுத்து பின் நம்பரை வைத்து அவர்களின் கணக்கில் இருந்து மொத்த தொகையையும் எடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து யார் அவர் என போலீஸார் விசாரித்த போது சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரிய வந்தது. இவர் ஆவடி டேங்க் பேக்டரியில் டெக்னீசியனாக பணிபுரிவதும் தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களாக பெண்கள் மற்றும் வயதானவர்களைக் குறிவைத்து இந்த பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த 271 டெபிட் கார்டுகளையும், அவரது டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in