கழுதைப்பால் சோப்பு பெண்களை அழகாக்கும்; கிளியோபாட்ரா கழுதைப்பாலில்தான் குளிப்பார்: மேனகா காந்தி சொன்ன ஆச்சர்ய தகவல்

மேனகா காந்தி
மேனகா காந்திகழுதைப்பால் சோப்பு பெண்களை அழகாக்கும்; கிளியோபாட்ரா கழுதைப்பாலில்தான் குளிப்பார்: மேனகா காந்தி சொன்ன ஆச்சர்ய தகவல்

கழுதைப் பால் சோப்பு எப்போதும் பெண்களை அழகாக வைத்திருக்கும், கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிப்பார் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள சௌபாலில் பேசிய மேனகா காந்தி, "கழுதைப் பால் சோப்பு எப்போதும் ஒரு பெண்ணின் உடலை அழகாக வைத்திருக்கும். கிளியோபாட்ரா, மிகவும் பிரபலமான ராணி, அவர் கழுதைப்பாலில்தான் குளிப்பார். டெல்லியில் கழுதைப்பாலில் தயாரிக்கப்படும் சோப்பு 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாம் ஏன் ஆட்டுப்பாலையும் கழுதைப்பாலையும் கொண்டு சோப்பு தயாரிக்க ஆரம்பிக்கக்கூடாது" என்று தற்போது வைரலாகும் வீடியோவில் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, "கழுதையைக் கண்டு எவ்வளவு நாட்களாகிறது. அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சலவை செய்பவர்களும் கழுதைகளை வளர்ப்பதை நிறுத்திவிட்டனர். லடாக்கில் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கவனித்த ஒரு சமூகம் உள்ளது. அவர்கள் கழுதைகளிடமிருந்து பால் கறந்து அந்த பாலை சோப்பு தயாரிக்க பயன்படுத்தினார்கள். மரங்கள் அழிந்து வருவதால், அதன் விலை உயர்ந்து வருகின்றன. எனவே ஒருவர் இறந்தாலும், அதற்காக சுமார் ரூ.15,000 – ரூ. 20,000 வரை செலவு செலவாகும். மாறாக, மாட்டுச் சாணத்தில் நறுமணப் பொருட்களைச் சேர்த்து, இறந்த உடலை தகனம் செய்ய பயன்படுத்த வேண்டும். இதனால் தகனச் சடங்குகளுக்கு வெறும் ரூ.1,500 முதல் ரூ. 2,000 வரை மட்டுமே செலவாகும், மேலும் இந்த மாட்டுச் சாணக் கட்டைகளை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

இன்று வரை ஆடு, மாடு வளர்த்து யாரும் பணக்காரர் ஆனதில்லை. ஒரு மாடு, எருமை, ஆடு நோய்வாய்ப்பட்டால், அதற்கு லட்சக்கணக்கில் செலவாகிறது. பெண்கள் கால்நடைகளை வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களால் எவ்வளவு செய்ய முடியும்? அதனால்தான் ஆடு அல்லது மாடு வளர்ப்பை நான் கடுமையாக எதிர்க்கிறேன். சம்பாதிக்க பத்து ஆண்டுகள் ஆகும், ஆனால் கால்நடைகள் ஒரு இரவில் இறந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும்"என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in