ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தடுத்து நிறுத்தம்!- ஆசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதம்

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தடுத்து நிறுத்தம்
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தடுத்து நிறுத்தம்ANI

கர்நாடகாவில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதால் பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால், பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து வந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஹிஜாப் அணிந்து வந்த மாணவி
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிANI

இதனிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கர்நாடகாவில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. மாணவ - மாணவிகள் காலை முதல் பள்ளிகளுக்கு வரத்தொடங்கியுள்ளனர். உடுப்பியில் உள்ள அரசு பள்ளியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் ஹிஜாப் அணிவந்தனர். மாண்டியாவில் உள்ள ரோட்டரி பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்க ஆசிரியர்கள் மறுத்தனர். ஹிஜாபைக் கழற்றக் கொண்டுதான் மாணவிகள் பள்ளிக்குள் செல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கறார் காட்டினர். இதனால், ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், "வகுப்பறையில் மாணவர்களை அனுமதித்தால் ஹிஜாபைக் கழற்றலாம். ஆனால் அவர்கள் ஹிஜாபுடன் பள்ளிக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை" என்று குற்றம்சாட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in