மாமல்லபுரத்தில் கரையை கடக்கத் தொடங்கியது புயல்: 70 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது!

மாமல்லபுரத்தில் கரையை கடக்கத் தொடங்கியது புயல்: 70 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது!

மாமல்லபுரத்தில் மேன்டூஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் நிலையில், 70 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கு கொண்டு இருந்த மேன்டூஸ் புயல் சென்னைக்கு 90 கிலோமீட்டர் தென் கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

தற்போது, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன், "மேன்டூஸ் புயலால் 70 மற்றும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து புயல் வடமேற்கு திசையை நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு கடற்கரை, புதுச்சேரி கடற்கரை, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளில் காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 85 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை காலை வரை காற்று வீசப்படும். அதன் பிறகு படிப்படியாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் குறையக்கூடும். தற்போது சென்னை காட்டுப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருவூர், ராணிப்பேட்டை, கலவை ஆகிய பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது" என்றார்.

இதனிடையே, மேன்டூஸ் புயலின் வெளிப்பகுதி கரையை தொடங்கியிருக்கிறது. மணிக்கு 14 கிமீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. இதனால், 70 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், மாமல்லபுரம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஈசிஆர் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கடைகள், உணவகங்களை மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in