மாமல்லபுரத்தை நெருங்கும் புயல்; 80 கிமீ வேகத்தில் காற்று வீசும்: களத்தில் இறங்கி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மாமல்லபுரத்தை நெருங்கும் புயல்; 80 கிமீ வேகத்தில் காற்று வீசும்: களத்தில் இறங்கி முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 90 கி.மீ தொலைவில் மேன்டூஸ் புயல் நிலை கொண்டுள்ளது. புயல் நெருங்கிய வரும் நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கு கொண்டு இருந்த மேன்டூஸ் புயல் சென்னைக்கு 90 கிலோமீட்டர் தென் கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க கூடும். இந்த புயல் மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் புயல் கரையை கடக்கும்போது 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர செயல்பாட்டு மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, விழுப்புரத்தில் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முகாம்களில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறி்த்து செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் வீடியோ கால் மூலம் விவரங்களை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின், எந்த மழை, புயல் ஆனாலும் இந்த அரசு சந்திக்க தயாராக இருக்கிறது என்றார்.

இதனிடையே, மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in