மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்: அரசாணை வெளியீடு

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்: அரசாணை வெளியீடு

மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதன் மூலம் 2.22 கோடி வீடுகள் பலனடைந்து வருகின்றன. இதற்காக ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியத்தொகை ஒதுக்கப்படுகிறது. இதை மின்வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்தச் சலுகைகளை பெறுவோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு ஆவணங்களை அளிக்கலாம் . விரைவில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் செயல்முறை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், ‘ஆதார் சட்டம் 2016 பிரிவு 7-ன் கீழ், மானியம் பெறும் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது சட்டமாகும். தொழிற்சாலைகள் , நிறுவனங்கள் உள்ளிட்ட மானியம் பெறாத மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in