மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம்படம்: ஜாக்சன் ஹெர்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மண்டைக்காடு பகவதி அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் என்னும் அமைப்பு சமய மாநாடு நடத்திவந்தது. இம்முறை அதை அறநிலையத்துறையே நடத்தும் என அறிவிக்க சர்ச்சையானது. கடைசியில், வேறு வழியின்றி ஹைந்தவ சேவா சங்கமும், அறநிலையத்துறையும் சேர்ந்தே நடத்தும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதனால் இம்முறை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வழக்கத்தைவிடக் கூடுதல் கவனம்பெற்றது. தென்மாவட்டம் முழுவதும் கவனிக்கப்படும் திருவிழாவாகவும் இந்த விழா மாறியது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை ஆகியவை நடந்தன. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அமைச்சர் சேகர்பாபுவும், கோயில் அர்ச்சகர்களும் சேர்ந்து கொடியேற்றினர். இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

மாசிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் மாலை யானை மீது களபம் பவனி வருதல், ஆறாம் நாளில் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்து சந்தனக்குடம் பவனி, அன்று இரவு 11 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in