காணாமல் போன ராகுல் படம்... கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸார் போர்க்கொடி!

காணாமல் போன ராகுல் படம்... கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக காங்கிரஸார் போர்க்கொடி!

சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் மானாமதுரை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

சிவகங்கை தொகுதி எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் இருந்து வருகிறார். கார்த்தி சிதம்பரம், கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் தனது மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதை வழக்கமாக கொண்டவர். இதனால் அவருக்கு சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.

இதுநாள் வரை கார்த்தி தனது லெட்டர் பேடில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் படங்களை அச்சிட்டிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தனது பெயர் மட்டும் இடம்பெற்றுள்ள லெட்டர் பேடில் கட்சியினருக்கு தகவல் அனுப்புகிறார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த போக்கு சிவகங்கை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியின் இந்தச் செயலைக் கண்டித்து மானாமதுரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ‘சிவகங்கை மாவட்ட நேரு குடும்பத்து விசுவாசிகள்’ என்ற பெயரில் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இதனை அறிந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக, நகரில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர்களைத் தேடிப் பிடித்து கிழித்து வருகின்றனர். இலைமறை காயாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே இருந்து வந்த கோஷ்டி பூசல், இந்த எதிர்ப்பு போஸ்டரால் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in