நடுரோட்டில் மண்வெட்டி கைப்பிடியால் அடித்து டிரைவர் படுகொலை!

நடுரோட்டில் மண்வெட்டி கைப்பிடியால் அடித்து டிரைவர் படுகொலை!

கம்பம் அருகே மண்வெட்டியின் கைப்பிடி கட்டையால் தலையில் தாக்கப்பட்டு ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுபகவதி.- இவரது மனைவி செல்வி. சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வந்த அழகுபகவதி, ஆக்டிங் டிரைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை பகவதி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் மயங்கி கிடந்தார்.

நீண்ட நேரமாக அவர் அதே இடத்தில் கிடந்ததாலும், அவரது இரு சக்கர வாகனம் அருகேயே நிறுத்தப்பட்டிருந்ததாலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தனர். அப்போது, தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அழகுபகவதி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பொதுமக்கள், உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், மண்வெட்டியின் கைப்பிடியில் உள்ள கட்டையால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர் எதற்காக கொல்லப்பட்டார், கொலையாளி யார் என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in