இரவில் வானத்தை நாேக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்: வைரல் வீடியோ

இரவில் வானத்தை நாேக்கி வீசப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்: வைரல் வீடியோ

ஹைதராபாத்தில் இரவு நேரத்தில் ஒருவர் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை வானத்தை நோக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தின் குர்சர்கவுஸ் பகுதிக்கு கடந்த 11-ம் தேதி இரவு ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் சற்று குறைவாகவே மக்கள் நடமாட்டம் இருந்தது. திடீரென்று அந்த நபர், தன்னிடம் இருந்த 500 ரூபாய் கட்டுகளை வானத்தை நோக்கி வீசினார். காற்றில் ரூபாய் நோட்டுகள் பறந்தன. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரவு நேரத்தில் ரூபாய் நோட்டுகளை வீசிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in