சாலை, மத்தி மீன் ஒரு கிலோ 1 ரூபாய் தான்; அள்ளிச் சென்ற மக்கள்: ஆச்சரியப்படுத்திய வக்கீல்

விற்பனை செய்யப்படும் மீன்கள்
விற்பனை செய்யப்படும் மீன்கள்

மீன் கடை திறக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தி உள்ளார் வழக்கறிஞர்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சில்லறை மீன் விற்பனையகம் இப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விற்பனையகம் திறக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி, இன்று ஒரு கிலோ 200 ரூபாய் மதிப்பிலான சாலை மீன், மத்தி மீன் போன்றவற்றை முதலில் வரும் 100 நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன், வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in