மிருகத்தை வேட்டையாடச் சென்றவர் நண்பர்களால் வேட்டையாடப்பட்ட கொடூரம்!

கேரளத்தில் அதிர்ச்சி சம்பவம்
மிருகத்தை வேட்டையாடச் சென்றவர் நண்பர்களால் வேட்டையாடப்பட்ட கொடூரம்!

கேரளத்தில் காட்டுக்குள் வேட்டையாடத் துப்பாக்கியுடன் சென்ற கும்பல் ஒன்று, மிருகம் என நினைத்து தவறுதலாக தங்களுடன் வந்தவரையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளத்தில் மூணாறை அடுத்த போதமேடு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன்(24) மலைவாழ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவரை கடந்த சில தினங்களாகக் காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

அப்பகுதியில் இருக்கும் தனியார் எஸ்டேட்களின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது இருபது ஏக்கர்குடி பகுதியைச் சேர்ந்த சாம்ஜி(45), ஜோமி, முத்தையா ஆகியோருடன் மகேந்திரன் ஒரு ஆட்டோவில் இருந்து 15 நாள்களுக்கு முன்பு இறங்கும் காட்சி பதிவாகி இருந்தது.

அதனடிப்படையில் போலீஸார் சாம்ஜி, ஜோமி, முத்தையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நண்பர்கள் நான்கு பேரும் இரவு நேரத்தில் காட்டுக்குள் வேட்டையாடப் போனது தெரியவந்தது. அப்படிச் செல்லும்போது டார்ச் லைட் வெளிச்சத்தில் சாம்ஜி, ஜோமி, முத்தையா ஆகியோர் மிருகங்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். அப்போது இன்னொரு பகுதியில் மகேந்திரன் நின்றிருந்தார். அவரிடம் டார்ச் லைட் இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த கோட்டில் இருந்த பட்டன் மிருகத்தின் கண் போன்று இருந்ததால் மிருகம் என நினைத்து அவரைச் சுட்டுவிட்டதாக மூவரும் தெரிவித்தனர். இதை மறைக்க அங்கே இருந்த ஏலத்தோட்டத்தில் அவரது உடலைக் குழிதோண்டி புதைத்துவிட்டதாகவும் அதிரவைக்கும் வாக்குமூலம் கொடுத்தனர்.

இதையடுத்து, துப்பாக்கிக் குண்டுகளுடன் புதைக்கப்பட்ட மகேந்திரன் உடல் தோண்டியெடுக்கப்பட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in