கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆண்: வீடியோ எடுத்த மனைவி - ஒடிசாவில் பயங்கரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைகர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆண்: வீடியோ எடுத்த மனைவி - ஒடிசாவில் பயங்கரம்

ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்ணை, அவரின் உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர செயலை அந்த நபரின் மனைவி தனது மொபைல் போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

ஒடிசா மாநிலம், கதிகுடா பகுதியில் உள்ள ஜெகநாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், தனது உறவினரான ஆஷா சுகாதாரப் பணியாளர் பத்மா ருஞ்சிகரிடம், மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அழைத்து செல்லும்படி உதவி கோரினார்.

இந்த நிலையில், பிப்ரவரி 28 அன்று பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, பத்மாவின் கணவர் லிலியா, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பத்மா ருஞ்சிகர் கர்ப்பிணி உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ய தனது கணவருக்கு உதவியது மட்டுமல்லாமல், அந்த செயலை தனது செல்போனிலும் பதிவு செய்தார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அகற்றுமாறு சைபர் செல்லிடம் போலீஸார் கேட்டுக் கொண்டனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தை பதிவு செய்த ஆஷா ஊழியரின் மொபைல் போனையும் போலீசார் கைப்பற்றினர். ஆஷா ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பிய போலீசார், கணவன் மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in