காதலை ஏற்க மறுத்த சிறுமி: துப்பாக்கியுடன் சென்ற இளைஞர் செய்த வெறிச்செயல்

காதலை ஏற்க மறுத்த சிறுமி: துப்பாக்கியுடன் சென்ற இளைஞர் செய்த வெறிச்செயல்

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காதலை ஏற்க மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் உள்ள சர்வயா பகுதியில், அனுராதா பிந்த் தனது உறவினர் நிஷாவுடன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அரவிந்த் விஸ்வகர்மா (22) என்பவர் அனுராதாவின் தலையில் துப்பாக்கியால் சுட்டார். இதன் காரணமாக அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் அச்சிறுமியை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர், சிறுமியை சுட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in