2 குழந்தைகள் கண் முன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை: மோட்டாரை இயக்கச் சென்ற போது நிகழ்ந்த சோகம்

2 குழந்தைகள் கண் முன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை: மோட்டாரை இயக்கச் சென்ற போது நிகழ்ந்த சோகம்

தண்ணீர் இறைப்பதற்காக மின்மோட்டாரை இயக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி தனது குழந்தைகள் கண் முன்பாகவே உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். மணிகண்டன், ஊர், ஊராகச் சென்று மளிகைப் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள பைப்பில் குடிநீர் வந்துள்ளது. இதனை, இறைப்பதற்காக மணிகண்டன், மின் மோட்டாரை இயக்கி உள்ளார்.

உயிரிழந்த மணிகண்டன்
உயிரிழந்த மணிகண்டன்

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், தனது குழந்தைகள் கண் முன்பாகவே மணிகண்டன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக இவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிந்த சத்திரப்பட்டி காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in