சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்!

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் மூழ்கி உயிரிழந்த முதியவர் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை டி.ஆர்.ஓ. காலனியைச் சேர்ந்தவர் 62 வயதான வெங்கடேசன். இவர் மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மேல கோபுரம் வாசல் பகுதியில் இயங்கும் கண்ணாடி கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை வெங்கடேசன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கையில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, வெங்கடேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குளத்திலிருந்து உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இது தற்கொலையா? அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in